Post views-

ஆளுங்கட்சியில் இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் எதிர்க்கட்சிக்கு தாவல்

கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி வரிசையில் இருந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் இன்று (6) மாகாண சபை அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார்.

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் கடந்த மாகாண சபை தேர்தலின் போது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவர் கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் இணைந்து செயற்பட்டார். தற்போது கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அதிருப்தியுற்ற நிலையிலே அவர் எதிர்க்கட்சிக்கு தாவியுள்ளார்.

எம்.ஜே.எம்.சஜீத்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்