ஒலுவில் அஸ்ரப்நகர் திண்மக்கழிவு சேகரிப்பு வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகளை முiறாகப் பராமரிக்காமையினால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக சுகாதார ரீதியாக பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
எனவே இதுதொடர்பில் உயர்மட்டக் குழுவொன்றை நியமித்து அடுத்துவரும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (3) அம்பாரை கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது அஸ்ரப்நகர் திணமக்கழிவு சேகரிப்பு வளாகத்தினால் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக ஆராயப்பட்ட போதே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் இத்திண்மக்கழிவு வளாகத்தில் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு பிரதேச சபைகளினதும், கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட பகுதிளிருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் மேற்குறித்த சபைகளிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மாதாந்த வருமானமும் கிடைக்கின்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அஸ்ரப்நகர் திண்மக்கழிவு வளாகம் முறையாக பராமிக்கப்படாமையினால் அவ்வளாகத்தின் வேலிகள் அழிந்தும் காணப்படுகிறது. இதனால் அவ்வளாகத்தை அன்டிய பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது இதன்காரமாக அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், ஈ தொல்லைகளினாலும் அச்சூழல் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் உணவுக்காக தினமும் அவ்வளாகத்தினுள் பிரவேசிக்கும் யானைகள் அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றது.
குறிப்பாக ஒலுவில் மக்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், மகாபொல பயிற்சி நிலையம், மாதிரி வீட்டுத் திட்டம் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு தங்களது காணிகளை வழங்கிய நிலையில் அம்மக்களின் ஏனைய காணிகளும் கடலரிப்பினால் காவு காவு கொள்ளப்படுகிறது. மேலும் ஒலுவில் மக்கள் தற்போது குறுகிய நிலப்பரப்பிற்குல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒலுவில் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள அஷ்ரப் நகரில் வாழும் மக்களும் திண்மக் கழிவு வளாகம் சீராக நிருவகிக்கப்படாமையினால் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கி வருவதுடன் காட்டு யானைகளின் தொல்லைகளினாலும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் பலர் மரணமடைந்தும் உள்ளனர். இதுதொடர்பாக அப்பிரதேச மக்கள் கன்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். திண்மக்கழிவு வளாகம் சீராக பராமரிக்கப்படாமையினாலே அப்பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பலமுறை பேசப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
எனவே மனிதாபிமான நோக்கத்துடன் இவ்விடயம் கருத்திற்கொள்ளப்பட்டு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், அம்பாரை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் போன்றோர் உள்ளடங்கியதாக உயர்மட்டக் குழுவொன்றை நியமித்து அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டது.
(MJM.Sajeeth)