இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர்.
இதனையடுத்து ஸ்ரீலங்காவிற்கான இந்திய துணை தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.



