Post views-

அகில இலங்கை ரீதியாக. சாதனை படைத்தவர்கள்..!

2016ம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில், சிதிஜா நிரன் சமரவிக்ரம என்ற மாணவன் அதி கூடிய புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

மாத்தறை மெதடிஸ்ட் கல்லூரியில் பயிலும் குறித்த மாணவன் 196 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மினி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளை பெற்று அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

அதேவேளை வவுனிய இறம்பைக்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கே. அபிசிகன் என்ற மாணவன் 195 புள்ளிகளைப் பெற்று, அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழி மூலமான மாணவர்களில் முதலாம் இடத்தையும் பிடித்துள்ளார். 



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்