சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகள் அறிவித்திருந்த நிலையில் மாலைதீவும் சார்க் நாடுகள் அமைப்பின் 19 வது உச்சி மாநாட்டை புறகணிப்பதாக அறிவித்துள்ளது.
காஷ்மீரில் உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்தே இவ்வாறு குறித்த நாடுகளினால் சார்க் மாநாடு புறக்கணிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 5 வது நாடாக மாலைதீவும் சார்க் மாநாட்டை புறக்கணித்தது.
அந்த நாடு சார்பில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலைத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘சார்க்’ அமைப்பின் உச்சி மாநாட்டை நவம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.