Post views-

 குதித்த வீரரின் பிருடத்தை பதம் பார்த்தது கம்பிகள்

-சனத் கமகே 
முல்லைத்தீவில் கடமையாற்றும் கடற் படைவீரர் ஒருவரின் பிருடத்தைத் துளைத்த கொங்றீட் கம்பிகள், சுமார் 45 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அகற்றியெடுக்கப்பட்ட சம்பவம், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, கதிர்காமப் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த சமரவிக்கிரம (வயது 34) எனும் மேற்படிக் கடற்படை வீரர், கதிர்காமம் டிப்போவுக்குச் இலங்கைப் போக்குவரத்துச் சேவை பஸ்ஸொன்றில் பயணித்தார். 

பஸ் பயணித்துகொண்டிருந்த போதே அவர் பஸ்ஸிருந்து குதித்து இறங்கினார். அருகே வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்துள்ளார். இதன்போது, 25 அடி ஆழம் கொண்ட அக்குழியிலிருந்த கொங்றீட் கம்பிகள், அவரது பிருடத்தைத் துளைத்துள்ளன. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்