Post views-

சாய்ந்தமருதில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை

(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தெளஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு சாய்ந்தமருது - 12 கடற்கரை வீதியிலுள்ள மீனவர் வாசிகசாலைக்கு அருகே அமைந்துள்ள திடலில் பெருநாள் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பாப் பிரசங்கமும் இடம்பெறும் என பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம். இனாமுல்லாஹ் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஏ. கலீலுர் ரஹ்மான் மௌலவியால் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தவிருப்பதாகவும் அதற்கான சட்டப்படியான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் திடல்தொழுகைக்கு வரும்போது அனைவரும் தங்களது வீட்டில் வுழு செய்துகொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டார்.


ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் 12ஆம் திகதி  திங்கட் கிழமை அன்று குறித்த நேரமான காலை 6.30க்கு தொழுகை ஆரம்பிக்கப்படும் எனவும் எனவே அனைவரும் குறித்த நேரத்துக்கு முன் வருகை தருமாறும் யாருக்காகவும் தொழுகைநேரம் தாமதிக்கப்படமாட்டாது என்றும் மேலும்  தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்