Post views-

Lafeer Mpc ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

எம்.ஜே.எம்.சஜீத்

இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாகும். புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும்தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,இப்றாஹீம் நபியின் தியாகத்தை உணர்ந்து கொண்டதால், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும்பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையாக  வாழ்வதுடன்  தாய் திரு  நாட்டை சுபிட்சம் மிக்க நாடக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும். என்று குறிப்பிட்டதோடு அனைவரது  வாழ்வும் சிறப்படைய நாங்கள்     உன்னத பணியை  செய்ய முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டதோடு .
எமது நாட்டில் நாம் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடுகின்ற இதே வேளை உலகில் பல பிரதேசங்களில் பல்வேறு துன்பங்களுடனும் கொடிய யுத்தங்களுக்கு மத்தியில் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் நம் உறவுகள். இவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இத்தினத்தில் உருக்கமாக பிரார்த்திப்போமாக  என்று குறிப்பிட்டதோடு இன்றைய நல்லாட்சியினை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு இலங்கையர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்டதோடு சிந்தித்து செயல்படுமாறும்  தெரிவித்தார்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்