(க.கிஷாந்தன்)
மாத்தளையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது முச்சக்கர வண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் பயனித்துள்ளனர்.
குறித்த விபத்து 09.09.2016 அன்று காலை வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல எனுமிடத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.