Post views-

10 இலட்சம் ரூபா செலவில் MOH பின் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள MOH பின் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதிகளவான மக்கள் பயனடையும் இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மழை காலங்களில் இவ்வீதியில் அதிகமான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 10 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு கொங்ரீட் வீதியாக மாற்றம்பெறவுள்ளது.
தற்போது இதனை புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த வீதியில் புனரமைபிற்காக இடப்பட்ட கிரவல் சரியான முறையில் செப்பனிடப்படவில்லை என்று இப்பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரடியாக இவ்வீதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு புனரமைப்பு வேலைகளை பார்வையிட்டார்.
இதன்போது நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை குறித்த வீதிக்கு நேரில் வரவழைத்து வீதி புனரமைப்பு பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இவ்வீதியில் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காத படி சரியான முறையில் வீதியின் மட்டங்களை சமப்படுத்துவதற்குரிய அளவிடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்