Post views-

கிழக்கு (இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம்)



(எம்.ஜே.எம்.சஜீத்) 

இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் புதன்கிழமை (10) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தினை வழங்கி இறக்காம மண்ணை கௌரவித்த அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவுக்கும் இறக்காம பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்