இந்த நாட்டிலே நீண்ட காலமாக இறைச்சிக் கடைகள் நடாத்தப்படுகின்றன. இவற்றுக்கான அனுமதியை உள்ளூராட்சி மன்றங்களே வழங்கி வருகின்றன. இலங்கையில் பசு மாட்டிறைச்சிக் கடை 10,000 உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் முஸ்லிம் பொதுமக்களே இறைச்சிக் கடைகளை நடாத்துகின்றனர். பசு மாட்டிறைச்சிக் கடை, ஆட்டிறைச்சிக் கடை, கோழி இறைச்சிக் கடை என்பனவும் ஒருசில இடங்களில் பன்றி இறைச்சிக் கடையும் இங்கே உண்டு. பன்றி இறைச்சிக் கடைகளைச் சிங்கள மக்களே நடாத்துகின்றனர்.
ஏழை மக்களால் மிகக் குறைந்த விலையில்இயற்கையையும் பெற இறைச்சியே மாட்டிறைச்சியே உள்ளது. அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு 112 கிலோ இறைச்சியை ஒருவர் உண்ணுகிறார். இந்தியாவில் 2 கிலோவையே உண்ணுகிறார். இலங்கையில் ஒருவர் சராசரியாக 13 கிலோ இறைச்சியை உண்ணுகிறான். இந்தியாவில் கால்நடைகள் பெருகிவிட்டதாகவும், அவற்றைக் கொல்லும் திட்டம் ஒன்றை இந்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
எமது நாட்டிலும் ஒரு பசு சராசரியாக 25 கன்றுகளை ஈணுவதாகவும், அதில் சராசரியாக 12 கன்றுகள் நாகு (பெண்) கன்றுகள் என்று எழுமாறாக நோக்கின், அவை ஒவ்வொன்றும் 25 கன்றுகள் ஈணும் எனின், அவற்றில் வரும் நாகுகள் ஒவ்வொன்றும் 25 கன்று எனின் நிலைமையைக் கொஞ்சம் யோசிக்கவும். மாடுகள் பல்கிப் பெருகிவிடும். அறுத்து உண்ணும் முறை இல்லாவிட்டால் எமது நாடு மாடு மயமாகிவிடும். மாடுகளுக்கான உணவு, நீர், இடம், எனப் பல பிரச்சினைகள் தோன்றும். எமது D.S சேனாநாயக்க சமுத்திரம் ஒரே நாளில் மாடுகளால் குடித்து முடிந்து விடும். மாடு ஒரு தாவர உண்ணி என்பதால் அது மிவும் துரிதமாக பெருகிவிடும் என்பதை விஞ்ஞான ரீதியாக சிந்திப்போர் ஏற்றுக் கொள்வர்.
இலங்கையிலுள்ள பிராணிகள், கால்நடைகள் பற்றிய தகவல் (2015)
--------------------------------------------------
* மொத்த கால்நடைகள் - cattle 1088119
* எருமை மாடுகள் - Buffaloe 323080
* பன்றிகள் - swine 69680
* ஆடுகள் - goat 316860
* கோழிகள் - chicken 16744210
* தாறா - duck 11590
மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் அறிய
---------------------------------------------
* இரத்தம் தோய்ந்த இறைச்சியைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தல்
* கடைகளை நவீன முறையில் அமைத்தல் ( glass fitting)
* அடுத்தவர்கள் பார்த்திருக்கும் போது இறைச்சியை வெட்டுவதை தவிர்த்து வெட்டுதல், சுத்தப்படுத்துதல்களை மறைவாகச் செய்தல். அவர்கள் பார்க்கும் போது நாம் எலும்பை கொத்துதல், இறைச்சியை வார்ந்து எடுக்கும் போது நம்மை "இரத்த வெறி பிடித்தவர்கள்" என தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். எமது மதத்தையும் விமர்சிக்கிறார்கள்.
* இறைச்சியைத் தனியாக வேறு பிரித்து ஒவ்வொரு விலைக்கும் விற்றல்
தனி இறைச்சு, முள்ளுடன், கொழுப்பு இறைச்சி, நரம்பு, லைன், நெஞ்சு, குடல், ஈரல், கலவன்
என்ற அடிப்படையில் பிரித்து ஒவ்வொரு விலைக்கும் விற்றல்.( இப்போது இவ்வாறே விற்கப்படுகிறது ஆனால் நான் சொல்வது அதை முன்னதாகவே வேறு பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என)
* இறைச்சிக் கடையை சுத்தமாக வைத்திருத்தல்
* எமக்கு பண்றி இறைச்சியைப் பார்த்தால் வெறுப்பு வருவது போல் அடுத்தவர்களுக்கு மாட்டிறைச்சியைப் பார்த்தால் வரும். எனவே அவ்வாறு வராதவாறு நாம் கடை நடவடிக்கைகளைப் பேண வேண்டும்
* வெட்டி சுத்தப்படுத்தும் வேலைகளை மறைவாகச் செய்தல்
* நவீன முறையில் பொதி செய்தல் (இன்றும் தேக்கு மர இலையில் சுற்றி வழங்கும் ஊர்கள் உண்டு)
* இறைச்சிக் கடையை நவீனமயமாக அமைத்தல் (modern shop)
* முக்கியமாக அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகளை பாதையோரங்கள், ஊரின் ஒதுக்குப்புறங்கள், கண்டநிண்ட இடங்களில் வீசி விடாது ஒரு முறைமையூடாக அகற்றல் அல்லது கைத்தொழில்களுக்கு மூலப் பொருளாக வழங்குதல்.
* மாடுகளை அறுக்கும் போது நாட்டு சட்டத்தைக் கடைப்பிடிப்பதுடன், எம்மைப் படைத்த இவற்றை ஹலாலாக ஆக்கிய எமது "அள்ளாஹ்வை" நாம் பயந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், சிறு கன்றுகள், நோய்வாய்ப்பட்ட பிராணிகள், அங்கவீனப் பிராணிகளை, விவசாயத்திக்கு உதவும் எருமை மாடுகளை ஒருபோதுமே அறுக்கப் படாது. இவற்றில் நாம் நிறையவே தவறு விடுகிறோம். பசு மாடுகள் கன்று ஈன்று 21 நாட்களுக்குள் மீள கருவுறுகின்றன. எனவே அவை கன்றுடனேயே வாழும் ஒரு நிலை உண்டு. இதை நாம் நன்கு கவனத்திற் கொள்ள வேண்டும். இவற்றில் நாம் தவறிளைத்து விட்டு அடுத்த சமூகத்தைக் குறை கூறிப் பயனில்லாமல் போகலாம். எனவே அவதானமும், மனிதாபிமானமும் தேவை.
ஒரு பிராணியைக் கொல்ல அந்தப் பிராணியின் நலன், அதை உண்ணும் மக்களின் நலன் என்ற அடிப்படையில் நோக்கின் மிகவும் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை அதை "கழுத்தால் இருப்பது" தான். மற்ற எல்லா முறையுமே தவறானதாகவே கொள்ளப்படுகிறது. தோல்தான் உணர்வை அறியக்கூடியது. தோல் அறுபட்டதும் நோவு உணரப்படுவதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* அறுக்கும் நிபந்தனைகளைச் சரியாகப் பேணி அறுத்தல். பிராணியின் உரிமையை மதித்தல்
* அறுக்கும் கத்தி, இடம், அறுக்கும் நபர் தொடர்பான இஸ்லாமிய நடைமுறைகளை கண்டிப்பாக கடைப் பிடித்தல்
* பிராணியைக் கொண்டு செல்லும் போது கால்நடை வைத்தியர், கிராம சேவகரின் அனுமதியைப் பெறல்
* ஏற்றிச் செல்லுவதற்குரிய தகுதியை உடைய வாகனங் களில் ஏற்றிச் செல்லுதல். (அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள்)
* ஏற்றிச் செல்ல சரியான முறையைப் பின்பற்றுதல், அளவுகளைச் சரியாகப் பேணுதல், நெருக்கப்பட்டு கொண்டு வருவதைத் தவிர்த்தல்
* மாடுகளை இரவில் கொண்டுவருதல், ஒன்றுடனொன்று பிணைத்துக் கொண்டுவருவதை முற்றாதக் தவிர்த்தல்
என்ற நடைமுறைகளைப் பேணி இவ்வாறான மாடறுப்புப் பணியைச் சரியாகச் செய்ய நாம் முற்படுவதனூடாக எமதும், உலகினதும் உணவுத் தேவையை பேணுவதுடன், இயற்கையையும் சமநிலையோடு காப்போம். எமது நாடு என்பதில் திடமாக உழைப்போம். ஒரு சிறிய விடயத்தில் நாம் விடும் தவறால் எமது மொத்த சமுதாயமுமே கேவலமாக நோக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றி விடும்.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.




