Post views-

பெண்களின் தொப்பையை குறைக்க எளிய வழிகள்!

பெண்கள் தங்களின் உடல் பருமனை சீராக பராமரிக்க வேண்டும். உடல் உபாதைகளை தவிர்க்க, பிடித்த ஆடைகளை உடுத்த, அழகான தோற்றத்தில் காணப்பட, தொப்பை வராமல் பார்த்துக்கொள்வது முக்கியமானது. பலரும் தொப்பையைக்குறைக்க நடந்து, ஓடி, மாத்திரை, மருந்து என்று பலவற்றை நாடிக்கொண்டு இருக்கின்றனர். இவை யெல்லாவற்றையும் தாண்டி இயற்கையாக உணவும், செயலும் மருந்து எனும் அடிப்படையில், தொப்பையை குறைக்க எளிய வழிகள் சில இதோ உங்களுக்காக

பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்
எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்ப து நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் சாப்பிடக்கூடாது.

பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்
மென்மையான உணவுகளை உட்கொள்வது உகந்தது. அதிக குளிரான பானங்களை அருந்தக்கூடாது. அதே போல் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.

 நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும்
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பை அடிக்கடி மாற்றக்கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.




கோபம், மன அழுத்தம் இவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்
கோபம், மன அழுத்தம் இவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. தினம் யோகா செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி எல்லா உறுப்புகளும் பலம் பெறும்.

நெய் பாவிப்பது நல்லது
நெய் உடன் சின்ன வெங்காயத்தை வதக்கி அதனை நன்கு அரைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலையும், மாலையும் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் அடிவயிற்று சதை குறைந்து உடல் அழகாகும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்