இன்று சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையிலான சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்று சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது .
இந்தப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்தப்போட்டியின் முதல் பாதியில் சுமார் 13 வது நிமிடத்தில் அதிரடியாக விளையாடிய மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டு கழகத்தின் 7 இலக்க வீரர் முதலாவது கோலை போட்டார் அதனைத் தொடர்ந்து 14 மற்றும் 4 ம் இலக்க வீரர்கள் கோல்களைப்போட மருதமுனை யுனிவேர்ஸ் அணி 3 கோல்கள் என பலம் பெற்றது .
அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் மருதமுனை யுனிவேர்ஸ் கழக 11 ம் இலக்க வீரர் மீண்டும் கோல் ஒன்றைப் போட அணியின் வெற்றி உறுதியானது .
அந்த அடிப்படையில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தினை 4 க்கு 0 என்ற அடிப்படையில் வென்றது மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டுக்கழகம்.
( ஜி,முஹம்மட் றின்ஸாத் )




