Post views-

மஸ்ஜித்களில் சிறார்கள் : எடுத்தெறியும் வளர்ந்தோர்

அள்ளாஹு அக்பர் என்று முழங்கும் அழகிய தலமே பள்ளி வாசல்.
எல்லா மாந்தரும் தொளவாருங்கள் என்றே அழைப்பது பள்ளி வாசல்.
ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் இணையும் தலமே பள்ளி வாசல்.
- ஈ. எம். நாஹூர் ஹனீபா-
ரமழானில் தராவீஹ், கியாமுல்லைய்ல், ஏனைய அமல்கள், திக்ருகள் அதிகமாக நடைபெறுவது வழக்கம். இதில் கணிசமாக சிறுவர்களும் கலந்துகொள்வதும் மரபாகும்.
சில மஸ்ஜித்களில் விடிய விடியவும் அமல்கள் நடைபெறுகின்றன. இடைக்கிடையே சிற்றுண்டிகள், இறுதியிலே சஹர் ஏற்பாடுகளும் வழங்கப்படுகின்றன. இவை வரவேற்கத்தக்கதே.
சிறுவர்கள் ஆர்வத்தோடு பங்கு கொள்வதுடன் அவர்கள் இவ்வாறான மரபுகளைக் கண்டும் மனமகிழ்வதோடு, எதிர்காலத் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கும், சமூகத்திற்கும், முக்கியமாகும்.
மஸ்ஜித்களை நிருவகிக்கும் வளர்ந்தோர், எந்தவித அதிகாரமுமற்ற ஆனால் "சட்டாம்பி" வேலை செய்யும் சில வழிதவறிகள் ஆகியோர் சிறுவர்கள் விடயத்தில் மிக கேவலமாக நடந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.
ஆர்வத்தோடு மஸ்ஜித்களுக்கு வரும் சிறுவர்களை அதட்டுதல், அச்சுறுத்துதல், முன்னாலே செல்ல விடாமை, சில சமயம் சிறுவர்களுக்கு அடித்தல், விடயங்களை அறிய விடாது ஒரே இடத்தில் அமரச் செய்தல், எங்கும் உசும்பக் கூடாது எனச் சொல்லுதல் எனப் பல்வேறு தரங்கெட்ட செயல்களில் முதியோர் சிறுவர்கள் விடயத்தில் மஸ்ஜித்களில் நடந்துகொள்வதை மிகக் கவலையோடு அவதானிக்க முடிகிறது.
இவர்களின் இவ் ஈனச் செயல் சர்வதேச அரங்கிலே முஸ்லிங்களுக்கு அவப் பெயரை எடுத்துத் தரும் ISIS யை ஒத்த கிராமிய மட்டத்தில் இஸ்லாத்தைத் தவறாக வழிநடாத்தும் ஒரு பிராந்திய ISIS களாகவே இவர்களின் செயல்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
தாடியையும், இஸ்லாமிய மரபுகளையும் முகத்திலே வைத்திருக்கும் இவ்வகை "தாயிக்களால்" சின்னஞ்சிறார்களின் பிஞ்சு மனது புண்படுவதும், காலப்போக்கிலே மஸ்ஜிதை வெறுத்து ஓடும் நிலை இவர்களுக்கு ஏற்படவும் வழி செய்வது இந்த சமூகத்தின் சாபமாகும்.
நாம் வளர்ந்தோர், முதியோர் சிறுவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். மஸ்ஜித்களுக்கு வரும் சிறுவர்களுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள். நாம் அவர்களை அரவணைக்காது வெறுத்தொதுக்குகிறோம். எதிரிகள் போல் பார்க்கிறோம். இது எமக்கு ஆரோக்கியமான செயலாகுமா? பிள்ளைகளை நாம் அன்போடு நோக்க வேண்டும். அவர்களை மென்மையாக வழி நடாத்த வேண்டும். புனித அள்ளாஹ்வின் வீட்டைத் தரிசிக்க வரும் பிஞ்சுகளை அதிகாரத் தோரணையில் நோக்குதல் தவறாகும். ஜாஹிலியக் கால பண்புகள் நம்மிடத்தில் இன்னும் ஏன் இருக்க வேண்டும். சின்னஞ்சிறு பிள்ளைகளை மஸ்ஜிதை வெறுத்து ஓட நாம் காரணமாக இருக்கலாமா?
சிறுவர்கள் மென்மையானவர்கள். அவர்கள் ரமழான் காலத்தில் அள்ளாஹ்வைத் தரிசிக்க வரும் போது நாம் இன் முகத்தோடு வரவேற்க வேண்டும். எல்லா சிறுவர்களுமே தனது தந்தையோடு வரமாட்டார்கள். சில சிறுவர்கள் தனியாக வருவது அவர்களின் ஆளுமையை வளர்க்க உதவும். சிறுவர்களுக்கே உரிய சில பண்புகள் அவர்களிடம் இருக்கும். அதற்காக நாம் வன்மையாக நடந்துகொள்ளக் கூடாது. கூட்டம் கூட்டமாக இருந்து கதை அளக்கிறார்கள் என்கிறார்கள். அது ஒரு பாரிய குற்றமாக நாம் கொள்ள முடியுமா? எல்லா சிறுவர்களும் பிரழ்வானவர்கள் என்ற தப்பான பார்வையை சில முதியோர் வைத்திருக்கிறார்கள். அந்த நோக்கிலே அவர்களை அணுகுகிறார்கள்.
பொறுப்புதாரிகள் இதை நன்கு கவனித்து சரியாக வழி நடாத்த வேண்டும். எந்தப் பொறுப்புமற்ற "தான்தோன்றித்" தனமாக அதிகாரத்தைக் கையிலே எடுக்கும் தரங்கெட்ட நபர்களின் ஈனச் செயலால் சிறுவர் சமுதாயம் மஸ்ஜிதுடனான உறவை துண்டிக்கும் நிலை எமக்கு வராது பாதுகாப்போம்.
ஏ.எல். நௌபீர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்