மட்டக்களப்பு மாநகர
சபையின் கீழ் இயங்கி வரும் சனசமூக நிலைய செயற்பாட்டின் கீழ் கல்லடி வேலூர்
இராமகிருஷ்ணா சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
29.06.2016 நேற்று மாலை 5.00 மணிக்கு கல்லடி வேலூர் நெக்டப் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது
மட்டக்களப்பு மாநகர சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு. A.R. அன்பழகன் குரூஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
புதிய நிர்வாகம் கல்லடி வேலூர் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன்
கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட பழைய நிர்வாக சபையினரால் கணக்குகள் விபரம்
மற்றும் ஆவணங்கள் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு தலைமை
தாங்கிய மட்டக்களப்பு மாநகர சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
உரையாற்றுகையில் “சனசமூக நிலையம் தொடர்பாக முழுமையான விபரங்களை தெளிவாக
கூறியதுடன், கல்லடி வேலூர் பிரதேசத்தில் கடந்த
காலங்களில் செயற்பட்ட இராமகிருஷ்ணா சனசமூக நிலையமானது மிகச்சிறப்பான முறையில்
இயங்கியது. இதற்கு காரணம் பழைய நிர்வாக சபையினரே. இதுபோல் இனி வரும் காலங்களில்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது பழைய நிர்வாகத்தை காட்டிலும் மேலும்
சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும் இந்த சனசமூக நிலையத்தினால், கல்லடி வேலூர்
பிரதேசத்தில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் இந்த
கிராமத்தின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக இறுதி செயற்பட வேண்டும் எனவும்
குறிப்பிட்டதுடன், அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளிலும் நான் துணையாக இருந்து
செயற்படுவேன்” எனவும் தெரிவித்தார்.
த.மயூரன்,
கல்லடி வேலூர்




