Post views-

இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் மனிதருக்கு விளைவிக்கும் ” சித்திரவதை ” குற்றத்திற்கான விழிப்புட்டும் நடைபவனை

இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால்  மனிதருக்கு விளைவிக்கும் ” சித்திரவதை ” குற்றத்திற்கான விழிப்புட்டும் நடைபவனை இன்று (30) காலை 09. மணிக்கு இலங்கை மனித உரிமை தலைமையகமனான பொரளை ஹிங்சிலி வீதி யில் இருந்து சுநத்திர சதுக்கம் வரை  நடை பவனை இடம் பெற்றது. இவ் நடைபவணையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் ஓழுங்கு அமைச்சா் சாகல ரத்தனாயக்க  மற்றும் சிவில் சமுகங்கள், முப்படைகள் பொலிசாா். பாடசாலை மாணவா்களும் கலந்து கொண்டாா். இவா்களுக்கு சித்திரவதை பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன்.

இலங்கையில் இம் மாதம் மட்டும் 53 பேர் பொலிஸ், நிலையங்களில் மற்றும்  சிரைச்சாலைகளில் சித்திரவதை செய்தவதாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைத்துவருகின்றன.   அத்துடன் கடந்த ஆண்டு மட்டும்  740 சித்திரவதை  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிக்கா உடகம தெரிவித்தாா்.   ஆனால் இந்த நாட்டில் உள்ள பொது மக்களும்  குற்றம் செய்தவரை பொலிசாா் கைது செய்து சித்தரவதை அல்லது வதை செய்தால் ்உண்மையை வரவளைக்காலாம் என்ற போா்வையிலேயே  உள்ளனா். இவ்வாறன செயல் தண்டனைக்குரிய குற்றம். மனிதர்களை பிடித்த்து யாரும் சித்திரவதை  செய்ய முடியாது.  அவ்வாறு நடைபெற்றால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட முடியும். அதற்கமைய  பாதிக்கபட்டவருடைய  வைத்திய  அறிக்கை மற்றும் சித்திரவதை செய்தவருக்குரிய தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஸ்ட ஈடும் பெற்றுக் கொடுக்க முடியும்.   எனவும் தீப்பிக்கா தெரிவித்தாா்

புதிய அரசாங்கம்  எதிா்காலத்தில் பொலிசசாருக்காக தணியான பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ உள்ளது அவ்வாறானால் எதிா்காலத்தில் மனிதனுக்கு வதை மற்றும் சித்திரவதை சம்பந்தமாக ஒரு புரண பயிற்சி அளிக்கப்படும். எதிா்காலத்தில் சித்திரவதை குற்றம் குறையும் எனவும் எதிா்ப்பாா்ப்பதாக தீப்பிக்கக தெரிவித்தாா்.  

அஷ்ரப் ஏ சமத்



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்