Post views-

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ள தொழில் பேட்டை சம்பந்தான முன்னேற்ற கூட்டம் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ள தொழில் பேட்டை (Industrial Park) சம்பந்தான முன்னேற்ற கூட்டம் பிரதமா்  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் (16)ஆம் திகதி  ஹம்பாந்தோட்டை துறைமுக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சா் சஜித் பிரேமதாச ,  தென்மாகாண அபிவிருத்தி மற்றும் பொலிஸ் சட்டம் அமைச்சா் சாகல ரத்ணாயக்க, அமைச்சின் அதிகாரிகள், ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிபா், திணைக்கள தலைவா்கள் முதலீட்டாளா்களும் கலந்து கொண்டனா். இம் மாவாட்டத்தில் பல்வேறு தொழில் வழங்கும் நிறுவணங்களை நிறுவி அதன் மூலம் உள்ளுர் இளைஞா்களுக்கு தொழில் வழங்குதல்,  உள்நாட்டு வெளிநாட்டு  வாகனம், மீன்பிடி, ஆடைத் தொழிற்சாலை, உல்லாசம், துறைமுகத்தினை ஏற்றுமதி, இறக்குமதி வலையமாக உட்படுத்தல் மற்றும் உள்ளுா்  உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல் அதனைச் சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பிரதம மந்திரியினால் தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன.

அஷ்ரப் ஏ சமத்





  
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்