நோர்வூட் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொகேய்ன் என அழைக்கப்படும் ஒரு தொகை போதைபொருளை 16.07.2016 அன்று நோர்வூட் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை இவ் போதைபொருளை தன் வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கென சந்தேக நபராக ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விரைந்த பொலிஸார் இந்த போதைபொருளை கண்டுபிடித்துள்ளனர் எனவும், பொலிஸ் விசாரணையின் பின் சந்தேக நபரை 17.06.2016 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்போவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)




