Post views-

பெருநாள்ஒ தினம் இடம் பெற்ற விபத்தில் ஒருவா் பலி

ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில் இரண்டு மோட்டார் பைசிக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் இஸ்தலத்திலேயே ஒருவர் பலி மற்றவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலை அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது இன்று 2016.07.06 புதன் கிழமை பி.ப.1.30 மணியளவில் ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில் ஒலுவிலை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் பாலமுனையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒலுவில் அஸ்ரப் நகரைச் சேர்ந்த அகமட்லெவ்வை முகம்மட் அசாருத்தீன் (வயது -22) என்பவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இவருடன் பிரயாணம் செய்த ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியைச் சேர்ந்த அப்துல் றபீக் சனூஸ் ( வயது -22) என்பவர் மிகவும் ஆபத்தான நிலையில் ஓலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவர்களுடன் மோதிய பாலமுனையை நோக்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் வந்த இருவரும் சிறுகாயங்களுடன் அவ்விடத்தை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் தெரிவருகின்றது. மேலதிக புலன்விசாரனைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்