Post views-

ஹிஜாப்புடன் சென்ற ஆசிரியைக்கு சிங்கள பாடசாலை அதிபர் வழங்கிய பதில்: கண்ணீருடன் உதவிகோருகின்றார்

அண்மையில் சப்ரகமுவ மாகாண சபையினால் விஞ்ஞான, கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. கேகாலை மாவட்டத்தின், கேகாலை கல்வி வலயத்திற்குட்பட்ட வரக்காபொலை துல்ஹிரிய மகா வித்தியாலயத்திற்கு வரக்காபொலையைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு விஞ்ஞான பட்டதாரி நியமன் வழங்கப்பட்டது.

நியமனக்கடித்ததுடன் துல்ஹிரிய மகா வித்தியாலயத்திற்கு குறித்த ஆசிரியை ஹிஜாப் அணிந்து சென்றுள்ளார். பாடசாலையின் அதிபரிடம் தனது நியமனக்கடிதத்தை கையளித்த போது அதனை பார்த்த அதிபர் உங்களுடைய ஹிஜாப் ஆடையை கலைந்து சாரி அணிந்து வருவீர்களாயின் உங்களை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியுமென்றும், ஹிஜாப் உடையுடன் உங்களை இப்பாடசாலையில் அனுமதிக்க முடியாது என்றும், வேறு பாடசாலையை அல்லது முஸ்லிம் பாடசாலையொன்றை நாடுமாறும் அந்த அதிபர் பணித்துள்ளார்.

இது பற்றி குறித்த ஆசிரியை கேகாலை வலய கல்வி பணிப்பாளரிடம் முறையிட்ட போது, குறித்த பாடசாலை அதிபர் உங்களது சேவை அவசியம் இல்லையென்று கூறும் வகையில் கடிதம் எடுத்துவருமாறும், அவ்வாறு எடுத்து வந்தால் தற்போது வெளிநாடு சென்றுள்ள மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எதிர்வரும் 26ம் திகதி நாடு திரும்பியதுடன் இதுபற்றி பேச முடியுமென்றும் கூறியுள்ளார்.

எனினும் குறித்த ஆசிரியையின் நியமனக்கடிதத்தில் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னர் குறித்த பாடசாலையில் கடமை பொறுப்பை ஏற்க தவறினால் கடமையை ஏற்க மறுத்துவராக கருதப்படுவீர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் வலய கல்வி பணிப்பாளருக்கு தெரிந்த போதிலும், குறித்த பணிப்பாளர் மேற்படி பதிலை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியையின் நியமனம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எம்.ஸித்தீக் ஹனிபா – வரக்காபொல

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்