பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 29.07.2016 அன்று இரவு ஹற்றன் விசேட பொலிஸ் பிரிவினரால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன விசேட பொலிஸ் பிரிவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)




