Post views-

கல்முனை புதிய மாநகர அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. விரைவில் வேலைகள் ஆரம்பம்

கல்முனை புதிய மாநகர அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதியமைச்சர்களான எச்.எ்ம்.எம் ஹரீ்ஸ், பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் மன்சுர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (15) கல்மூனை மாநகரசபையில் நடைபெற்றது.
புதிய கல்முனை மாநகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுவீகரிக்கப்பட்ட நிலங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புதிய வீதி அபிவிருத்தி திட்டங்கள், அரச கட்டிடங்களை மீள் நிர்மாணம் செய்வதில் உள்ள சிக்கல்கள் போற்றவற்றை மீளாய்வு செய்து அவற்றை தீர்த்து வைப்பதற்கான முடிவுகளும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, காணி மீட்டல் கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவங்களின் உயரதிகாரிகளுடன் நடைபெற இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் கரையோர மாவட்டங்களில் காணப்படும் குப்பை அகற்றும் பிரச்சினை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்