Post views-

கிண்ணியா பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 12 வீடுகளுக்கு சேதம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவூடாக வீசிய கடும் காற்று காரணமாக 12 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிண்ணியா, சோலைக்கட்டுவான், மயிலடப்பஞ்சேனை, உப்பாறு ஆகிய கிராமங்களை ஊடறுத்து நேற்று (15) மாலை கடும் காற்று வீசியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் நிலவிய போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து 2007 ஆம் ஆண்டு மீள்குடியமர்த்தப்பட்டு, தகர வீடுகளிலும், தற்காலிக கொட்டில்களிலும் வாழ்ந்து வந்த மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்