மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த லக்ஸல (Laksala) நிறுவனம் முன்வந்துள்ளது.
கடந்த 2016.05.14 அன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேலதிக செயலாளர் திரு..M.A..தாஜீர்தீன் (புடவை கைத்தொழில் சிறிய மற்றும் நடுத்தர அபிவிருத்தி) அவரது தலைமையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள பாலமுனை புடவைக் கைத்தொழில் சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையத்தில் காலை 10 மணியளலவில் நடைபெற்ற கலந்துரையாடலின் படி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க லக்ஸல (Laksala) நிறுவனம் 21.06.2016 அன்று பாலமுனை புடவைக் கைத்தொழில் சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையத்திற்கு விஜயம் செய்வதாக தெரிவித்திருந்தது. இந்நிகழ்வில் பணிப்பாளர், புடவைக் கைத்தொழில் திணைக்களம், பணிப்பாளர் நாயகம், இலங்கை புடவைக் கைத்தொழில் நிறுவகம், பணிப்பாளர் மற்றும் தலைவர் தேசிய வடிவமைப்பு நிலையம், பணிப்பாளர், தேசிய அருங்கலைகள் பேரவை, பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர், இலங்கை கைப்பணி சபை (Laksala) ஆகியோர் கலந்து கொண்டனர்.
21.06.2016 செவ்வாய்க்கிழமை அன்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பாலமுனை புடவைக் கைத்தொழில் சாயமிடல் மற்றும் சேவைகள் நிலைய கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் புடவை மற்றும் நெசவு கைப்பணி உற்பத்தியாளர்கள் மற்றும் பிரம்பு, பனையோலை, சிரட்டை, சிற்பிகளை பயன்படுத்தி கைவேலை செய்யும் உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் வருகை தந்திருந்த லக்ஸல (Laksala) நிறுவனம் இவர்களுடைய பொருட்களின் தரத்தை பார்வையிட்டதுடன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 18 உற்பத்தியாளர்களிடம் 800 பொருட்களுக்குரிய ரூபா 230,750 இற்கு கொள்வனவு கட்டளை வழங்கியது. மேலும் 04 மாத கால தொடர் கவனிப்பின் பின் கொள்வனவு கட்டளைகளின் எண்ணிக்கை அதிகரித்து தரமுடியும் எனவும் கூறினர்.
இந்நிகழ்வில் லக்ஸல (Laksala) நிறுவனத்தின் கோசல ஸ்ரீவர்த்தன, பணிப்பாளர், வஜிர சமரத்ன, பிரதிப் பணிப்பாளர், நியால் பெர்னான்டோ, முகாமையாளர், (Laksala). நித்தியராஜ், மேற்பார்வையாளர் மற்றும் இந்நிலையத்தின் பொறுப்பதிகாரியும், பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பாலமுனை பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.
(கல்லடி-மயுரன்)







