இளைஞர்கள் இருவரை நிர்வாணமாக ஒளிப்பதிவு செய்து அதனூடாக ஆபாச இறுவட்டு தயாரித்த பிக்குவிற்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பெந்தோட்டை ரத்தாகொட விஹாரையின் விஹாராதிபதி என்றழைக்கப்படும் பாணந்துறை சந்திம (வயது 34) என்பவருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பலப்பிட்டிய நீதவான் அசங்க பொத்தரகம முன்னிலையில் 13 -08-2013 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
பிக்குவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சசங்க ஜயசேகர, தனது தரப்பைச்சேர்ந்த சந்திம தேரர் சமய மற்றும் ஒழுக்க தவறுகளை இழைத்துள்ளாரே தவிர சட்டரீதியான தவறை இழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தேரரின் கணனியில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் விசேட அறிக்கையை முன்வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவருக்கான விளக்கமறியலையும் நீடித்தார்.




