Post views-

முஸ்லிம் இளைஞனை விகாரையொன்றுக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம்-மன்னிப்புக் கோரப்பட்டது

கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கமை பகுதியில் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரங்களின்போது முஸ்லிம் நபர் ஒருவரை புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் குறித்து போலீசாரினால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப் பட்டது.

பொது பல சேனா அமைப்பின் தலையீட்டுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப் பட்ட போது தன்னை அளுத்கமை பகுதியில் அமைந்துள்ள புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கியதாக மனுவை சமர்ப்பித்த முகம்மத் அமீர் எனும் நபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கடுமையாக தாக்கப்பட்ட தன்னை போலீசாரிடம் ஒப்படைத்தாக கூறிய மனுதாரர் போலீசார் தனக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி போதைபொருள் வைத்திருந்தமை தொடர்பாக களுத்துறை தீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததாக அறிவித்தார்.

இதன் முலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

நேற்று (14) வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது கருத்துக்களை தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப் பட்ட மனுதாரரிடம் மன்னிப்புக் கோர போலீசார் தயார் என்று அறிவித்தார்.

அதற்கு மனுதாரர் இணக்கம் தெரிவித்தார்.
அதன் பின்னர் திறந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னர் தாக்கப்பட்ட நபரிடம் அளுத்கமை போலீஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியினால் மன்னிப்புக் கோரப்பட்டது.

இதேவேளை மனுதாரருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதைபொருள் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் போலீசார் அறிவித்தனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்