கிழக்குப் பல்கலைக்கழக,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.ஏ.
நூருல் அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைப் படைப்புக்களின் கண்காட்சி அண்மையில் கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கமு/கமு/அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபரான யூ.எல்.எம்.
அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியினை, கவிஞர் சோலைக்கிளி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.
(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)







