Post views-

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் மு.கா உயர்பீட உறுப்பினர்கள் றியாழும் இஸ்மாயில் ஹாஜியும்.

நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி மீன் சந்தைக் கட்டடத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் பெயர் இணைக்கப்படாமையால் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் அதிருப்பதினை வெளிப்படுத்தி வருகின்றனர். நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி மீன் சந்தைக்கட்டடம் நாளை (22 ஜூன் 2016) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் பெயர் உள்வாங்கப்படவில்லை. 

கல்குடாத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவ்வுறுப்பினர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக தமது அதிருப்தியை வெளியிடும் மூத்த உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கல்குடாவில் தற்போது கட்சி  சார்பாக பிரதிநிதி  யாரும் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் இந் நிகழ்வு அழைப்பிதலில்       உள்வாங்கப்ட்டிருக்க வேண்டும் .

-கல்குடா போராளிகள்

நன்றி-கல்குடா நேசன்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்