இவ் வருட ரமழான் மாதத்திற்கான உலர் உணவு வினியோகம் கடந்த வாரம் இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் எய்ட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இவ் வினியோகச் செயற்பாடுகள் நடைபெற்றன.
ரெக்டோ அமைப்பினூடாக கந்தளாயில் 254 உலர் உணவுப் பொதிகளும் பெடோ அமைப்பினூடாக மௌலவி நளீர்
அவர்களுடன் இணைந்து புல்மோட்டை மற்றும் குச்சவெளிப் பிரதேங்களில் 325 பொதிகளும் தோப்பூரில் டெரோ
அமைப்பினூடாக 80 பொதிகளும் மூதூரில் தடயம் அமைப்பினூடாக 250 பொதிகளும் ஹொரவபொதான கஹடகஸ்திகிலிய
பிரதேசங்களில் ஹோப் ஒப் பீப்பிள் அமைப்பினூடாக 475 பொதிகளும்; திருகோணமலை மற்றும் அநுராதபுரம்
ஆகிய மாவட்டங்களிலுள்ள வறிய பின்தங்கிய குடும்பங்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகள்
வினியோகிக்கப்பட்டன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹியுமன் விசன், சலாமா, சீரா அமைப்புகளினூடாக 670 உலர் உணவுப் பொதிகள்
வினியோகிக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் 500 பொதிகளும் ஆக 2534 உலர் உணவுப்
பொதிகள் சென்ற வார காலத்தில் முஸ்லிம் எய்ட் அமைப்பினால் வினியோகம் செய்யப்பட்டன.
மொனராகல, பொலநறுவ, குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இவ் வாரம் மேலும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள்
வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
(முஸ்லிம் எயிட் ஊடக பிரிவு )