கல்முனை பிரதேசத்தில் ரஹ்மத் பவுண்டேசனினால் விதவைகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்களுக்கு புனித ரமழான் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (18) ரஹ்மத் பவுண்டேசனின் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது.
ரஹ்மத் பவுண்டேசனின் இணைப்பாளர் அல்-ஹாபிழ் ஏ.ஆர்.எம்.இர்பான் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நகர திட்டமிடல் மற்றும் நிர்வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர்பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை பயனாலிகளுக்கு வழங்கி வைத்தார். இதில் ரஹ்மத் பவுண்டேசனின் ஆலோசகர் எம்.ஆர்.எச்.நஸீம் ஹாஜியார், ரஹ்மத் பவுண்டேசனின் நற்பிட்டிமுனை அமைப்பாளர் ஏ.நூர்தீன், ரஹ்மத் பவுண்டேசனின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.










