
தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான ஒலிம்பிக் வெள்ளிப்பதக்க வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தற்போது கம்பஹா பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்ச்சை பெற்றுவருகிறார்.
இவருக்கு சொந்தமான வீடு ஒன்றினை வாடகைக்கு வழங்க முற்பட்ட போது அவரது கணவன் அவருடன் முரண்பட்டு தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்ள்ளார்.
நேற்று நள்ளிரவு குடிபோதையில் அவரை தேடிவந்த அவரது கணவன் சவலால் தக்குதல் நடத்தியாக குறிப்பிட்ட அவர் தான் வாழ்நாளில் சம்பாதித்தவை அனைத்தையும் தனது கணவன் இல்லாமல் செய்துவிட்டதாகவும் தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் தனது கனவாரல் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும் வெட்கத்தின் காரணமாக தான் இது தொடர்பில் வெளியே சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தற்போது வெலிவேறிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



