Post views-

அலவி மௌலானாவின் ஜனாஸா செய்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்வெளியிட்டுள்ள அனுதாப செய்தி

சகோதர இனத்தவர்களால் மதிக்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதி அலவி மௌலானா என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் முன்னால் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா செய்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார் அந்த செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது.

அல்ஹாஜ் அலவி மௌலானாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் முதற்கண் திருகோணமலை மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன் சகோதர இனத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் இனவாதம் பேசாத ஒரு கனவான் அரசியல்வாதி எம்மைவிட்டு பிரிந்திருப்பது எமது சமூகத்துக்கு பாரிய இழப்பே  அமைச்சராக ஆளுநராக தொழில்சங்கவாதியாக இவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை யாராலும் மறக்கமுடியாது.

புனித ரமழான் மாதத்தில் இறையடி சேர்த்திருக்கும் அல்ஹாஜ் அலவி மௌலானாவுக்கு மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயரிய  இடம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

ஊடகப்பிரிவு
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்