தலித் மாணவி ‘ராகிங்’ கொலை முயற்சி வழக்கில் 3 சீனியர் மாணவிகள் கைது
குல்பர்கா
மலப்புரம் மாவட்டம் எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஜானகி. இவருடைய மகள் அஸ்வதி (வயது 19). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தார். அஸ்வதி கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். விடுதியில் மாணவியுடன் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவிகள் தங்கி இருந்தனர்.
மாணவி அஸ்வதியை அவருடன் தங்கியிருந்த இடுக்கியை சேர்ந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ராக்கிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன்னுடைய தாயிடம் கூறினார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி அஸ்வதிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி விடுதி நிர்வாகிகள் கலப்பரக்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மாணவியை விடுதி நிர்வாகிகள் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வயிற்று வலி குறையதால் பெற்றோர் மாணவியை திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஸ்வதியின் உணவுக்குழாயில் பாதிப்பு இருப்பதை கண்டனர்.
இதுபற்றி மாணவியிடம் டாக்டர்கள் கேட்ட போது, விடுதியில் தங்கியிருந்த போது மூத்த மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயிலை குடிக்க கொடுத்து ராக்கிங் செய்ததாக கூறி கதறி அழுதார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இந்த தகவலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மாணவியை மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பினாயில் குடித்ததில் மாணவியின் உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் மாணவியுடன் தங்கியிருந்த சீனியர் மாணவிகள் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் மேல்விசாரணைக்காக வழக்கு குல்பர்க்கா பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அக்கல்லூரியை சேர்ந்த 5 சீனியர் மாணவர்கள் மீது கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நகல், மேல்விசாரணைக்காக குல்பர்கா போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இது தொடர்பாக குல்பர்கா போலீசார் நர்சிங் கல்லூரியில் படித்துவந்த் 3 சீனியர் மாணவர்களை கைது செய்து உள்ளனர்.
இது குறித்து குல்பர்கா போலீஸ் சூப்பிரெண்டுசதீஸ் குமார் கூறும் போது :-
கைது செய்ய்யபட்ட மாணவிகள் பெயர் லட்சுமி, அதெரா, மற்றும் விஷ்ணு பிரியா ஆவார்கள். இவரகள் 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். என கூறினார்




