-எம்.ஜே.எம்.சஜீத்-
கடமைக்கு மேலதிகமாக மக்களுக்காக அர்பணிப்புடன் சேவையாற்றி வந்த பாராட்டி கௌரவிப்பதில் மக்கள் சார்பில் பெருமையடைகின்றேன் என இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாரமயாளர் சிறில் பண்டார தெரிவித்தார்.
39 வருடங்கள் மக்களுக்காக அர்பணிப்புடன் கடமையாற்றி ஒய்வு பெற்று சென்ற அட்டாளைச்சேனை இலங்கை வங்கியின் முகாமையாளர் ஏ.சீ.கியாசுத்தின் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண இலங்கை வங்கி முகாமையாளர் சங்கத்தினால் களுவாஞ்சிகுடி இலங்கை வங்கியின் பயிற்சியாளர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதயாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

 



 
