பொலிஸ் அதிகாரி அல்லது மதுவரி அதிகாரி எனக் கூறி வீதிகளில் செல்வோரை நிறுத்தி சோதனை செய்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த ஒருவரை நுகேகொடை, எம்புல்தெனிய பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பிரிவின் தீர்க்கப்படாத குற்றப்பிரிவு மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸர் தெரிவித்தனர்.
குறித்த நபர் மிரிஹான மற்றும் கொஹுவலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 27,000 ரூபா பணம், 45,000 ரூபா பெறுமதியான இரண்டு வெள்ளி மாலைகள், கைவலையல்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பன்னிபிட்டிய, பெலவத்தை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று கங்கொடவிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




