பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, முஸ்லிம் குடியேற்றவாசிகளை இதன்பிறகு தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என போலந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரபு மற்றும் வட ஆபிரிக்க முஸ்லிம் குடியேற்றவாசிகளை பொறுப்பெடுப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் இணக்கப்பாடொன்றுக்கு வந்திருந்தது.
ஹங்கேரியா, ரூமேனியா, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள் இதற்கு உடன்பட மறுத்திருந்தபோது, போலந்து மேற்படி முஸ்லிம்களுக்காக ஆதரவுக் கரம் நீட்டியிருந்தது.
ஜேர்மன், பிரான்ஸ்கூட இதனை விமர்சித்திருந்தன.
இந்நிலையில், பிரான்ஸில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, முஸ்லிம் குடியேற்றவாசிகளை இதன்பிறகு தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என போலந்து அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 4500 அகதிகளுக்கு தம் நாட்டில் புகலிடம் கொடுத்துள்ள போலந்து, மேலும் 2000 அகதிகளை உள்வாங்கவும் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




