மொனராகலை, மியனகந்துற மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளார்.
மொனராகலை, மியனகந்துர பாடசாலையில் கல்வி கற்கின்ற இரண்டு மாணவிகளை தொலைபேசி குறுஞ்செய்திகளை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் ஒருவரைப் பணி நீக்கம் செய்வற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியர், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமைத் தொடர்பில் பெற்றோர் பாடசாலையை சுற்றிவளைத்து ஆர்பாட்டம் மற்றும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்,
அவரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.




