பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
விசேட அறிக்கையொன்றின் மூலம் தமது அனுதாபத்தை பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலக பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என இருவரும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




