சமூக வலைதளங்களின் ஊடாக கருத்துக்களை வெளியிடும் போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் பிரச்சினையில் சிக்குவதை தவிர்க்க முடியாது போகும்.
இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது,
ரொபியீன் கிரிவ் என்ற பெண் பிரிந்து வாழும் தனது கணவன் தொடர்பாக அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக தனது கணவர் மீது குற்றஞ்சாட்டி நிலைத்தகவல்களை இட்டுள்ளார் ரொபியீன் கிரிவ்.
இவ் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதையடுத்து தனது கணவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலும் அதனை நிரூபிக்கத் தவறியமையாலும் 12,500 டொலர்களை நட்ட ஈடாக வழங்கும் படி சிட்னியில் உள்ள நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.(ஹி)