ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணவு மன்றத்தின் உறுப்பினர்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்னாள் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணவு மன்றத்தின் உறுப்பினர் முஷ்ரிப் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
கடந்த 25 வருடங்களாக புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. இதன் காரணமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் சக்தியை உருவாக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை தமது அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து அவரின் உபதேசங்களையும் பெற்றுகொண்டோம்.

எமது அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை. என்றாலும் கடந்த காலங்களில் தேர்தல் வாக்களிப்பதற்கு தேவையான அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, இலவசமாக அதனை ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
இந்நிலையில் இன்று தேர்தல் வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வீடு வீடாக விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இதன்போது புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் ஆதரவாளர்கள் சுமார் 60 பேர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணவு மன்றத்தின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு (முறைப்பாட்டு இலக்கம் CIB 01197-19 ) செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(டி)