Post views-

த.தே. கூட்டமைப்பை மக்கள் தற்போது வெறுத்துள்ளனர் – எஸ்.சர்வேந்திரா


ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வரழைக்கப்படுவதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் எடுத்துக் காட்டியுள்ளதாக ஜனநாயக தொழில் கட்சியின் தலைவர் எஸ்.சர்வேந்திரா தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் துறையப்பா மைதானத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதாக தெரிவித்த அவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்கு தமது கட்சி முழு மூச்சாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதாக கூறி வருகின்றனர். எனினும் இன்றைய கூட்டத்தில் தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் ஜனாதிபதியின் கூட்டத்துக்கு வருகை தந்து தாங்கள் ஜனாதிக்கே இம்முறை வாக்களிக்க உள்ளோம் என்பதை மறைமுகமாக வெளிக்காட்டி சென்றுள்ளார்கள்.
இதன் மூலம் வடமாகாணத்தில் இம்முறை ஜனாதிபதிக்கு அதிகளவான வாக்குகள் வழங்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இன்றைய கூட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இருப்பதையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் தற்போது வெறுத்து வருகிறார்கள் என்பதையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதென்று தெரிவித்த சத்யேந்திரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே வடக்கில் மீண்டும் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.(டி)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்