Post views-

மஹிந்தவின் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண் வைத்தியசாலையில்: அச்சுறுத்திய டக்ளஸ்

மஹிந்தவின் யாழ்.பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர் தொடர்பில் ஊடகங்களுக்கு எந்தவொரு தகவலும் தெரியக் கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலை நிர்வாகத்தை அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நேற்றைய தினம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பல பொய்களை கூறி சுமார் 450ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்வாறு வந்த மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படாத நிலையில், அதிகரித்த சன நெரிசலில் 5மாத பிள்ளை மற்றும் இளம் பெண் ஆகியோர் மயங்கி வீழ்ந்த நிலையில், சன நெரிசலில் நசியுண்டதாக மக்கள் கண்கண்ட சாட்சியாக கூறுகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு நசிபட்ட இளம் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்ட நிலையில், அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து சிகிச்சை பெறுபவர் யார்? அவர் ஆணா? பெண்ணா? என்றாவது தெரியப்படுத்துங்கள் என ஊடகங்கள் கேட்டதற்கும் பதிலளிக்காத வைத்தியசாலை நிர்வாகம், அது குறித்து தகவல் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தமக்கு கூறியிருப்பதாக தெரிவிக்கின்றன.







(த)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்