சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மிக சோசமான உயிரிழப்பாக இது கருதப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த வருடம் சிரியாவில் உயிரிழந்தவர்களில் 18 ஆயிரம் பேர் பொதுமக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 3 ஆயிரத்து 500 பேர் சிறுவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சிரியாவில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் 3.2 மில்லியன் மக்கள் நாட்;டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஈராக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் மோதல்களில் மிகவும் அதிக உயிரிழப்புகளை சந்துத்துள்ள ஆண்டாக கடந்த வருடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஹி)




