அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிகம எனும் பிரதேசத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கபட்டபோதும் இம் மக்களுக்கான போதியளவான நிவாரணங்கள் சென்றடயவில்லை என்று அறியக்கிடைத்தது.
மூவின மக்களும் செறிந்து வாழும் இப்பிரதேச மக்களுக்காக உதவும் நோக்குடன் கொழும்பில் வசிக்கும் அஸீம் ஜவ்பர் மற்றும் இம்ரான் நெய்னார் ஆகிய இரு சகோதரர்களும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தணவந்தர் பெரும்தொகை நிதியினை வழங்கியதோடு, சில குறிப்பிட்ட முகநூல் நண்பர்களும் தங்களால் இயன்ற நிதிகளையும் வழங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரிடமும் பெற்றுக்கொண்ட நிதியின் மூலமாக நிவாரண பொதிகளை சேமித்து வழங்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டதோடு, இப்பொதிகளில் சுமார் 4000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் எழுபதும் 10kg கொண்ட அரிசி பொதிகள் எண்பத்தைந்தும் 2017.06.04 - ஞாயிற்றுக்கிழமை இன்று பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
கொடிகமயில் அமைந்துள்ள அல்-இஸ்ஸத்துல் அஸிஸியா பள்ளிவாசல் நிர்வாகிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் சகோதரர்களின் கரங்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, சகோதரர்களின் வேண்டுகோளுக்கமைவாக பயனாளிகளின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.