Latest News
    Post views-

    புல்மோட்டை பிரதேசத்தில் யானையின் அட்டகாசம் சம்பவ இடத்திற்க்கு விரைந்தார் அன்வர்

    கடந்த நான்கு நாட்களாக புல்மோட்டை ஜின்னாபுரம் மற்றும் வீரன்தீவு போன்ற பகுதிகளிலுள்ள சில வீடுகளுக்குள் காட்டு யானை உட்புகுந்து குடியிருப்புக்களை சேதமாகியுள்ளது. குறித்த யானைகள் பதவி சிரபுர பகுதியில் கடும் அட்டகாசம் புரிந்து வந்த நிலையில் அக் கிராமத்தை சுற்றி  யானை வேலிகள் அமைக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட யானை புல்மோட்டை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளதாக வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இது விடயமாக கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் சம்பவ இடத்திற்க்கு 2017.06.29-வியாழக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதோடு, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் வன ஜீவராசி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஆகியோருடன் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவத்தை தெரியப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இதன் பயனாக குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டா ஈடு வழங்குவதற்காக கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளர் மூலம் அரசாங்க அதிபருக்கு பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை உடனவடியாக அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். 

    மேலும் குறித்த காட்டு யானையை சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு கொழும்பிலிருந்து இரண்டு நாட்களுக்குள் சரணாலய அதிகாரிகளை வரவழைப்பதாகவும்,  எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி நடை பெறவுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்மோடடை பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் நடவடிக்கைக்கு அறிக்கை ஒன்றினை சமர்பிக்கும்படியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரை குறிப்பிட்ட வன ஜீவராசி அதிகாரி கேட்டுக்குக்கொண்டார். 

    அதற்கமைவாக அரசாங்க அதிபரை தொடர்புகொண்டபோது ஜனாதிபதியின் விசேட திட்டத்தின்கீழ் புல்மோட்டை பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியினை அவசரமாக மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக கிராம சேவகர் உட்பட அலுவலகர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளை உடனடியாக இன்று அனுப்பி வைப்பதாகவும் அரசாங்க அதிபர் மாகாண சபை உறுப்பினர் அன்வரிடம் தெரிவித்தார்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்