Latest News
    Post views-

    அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஹதீஸ் மஜ்லிஸ்

    (எம்.ஜே.எம்.சஜீத்)

    புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகள் இவ்வருடமும் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஹதீஸ் மஜ்லிஸ் பிரிவு தலைவர் மௌலவி எம்.ஐ.சப்றி(ஷர்கி) தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு தினமும் காலை 10மணி தொடக்கம் 12மணி வரை நடைபெற்று வருகிறது. 

    (30) திகதி நடைபெற்ற ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எப்.முபாரிஸ், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம்.அஷ்ரப்(ஷர்கி) ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினர்.

    இந்நிகழ்வில் மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தாசீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அல்-இபாதா கலாசார மன்றம் 6வது வருடம் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வினை நடாத்தி வருகின்றது. இந்நிகழ்வில் தலைசிறந்த உலமாக்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்