Post views-

அரசு பொதுபல சேனாவின் அட்டாகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்-சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்ம நஸீர்



பொதுபல சேனாவின் அட்டாகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நல்லாட்சி அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அதற்கான ஆவணங்களை கிழக்கு மாகாண சபையூடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்ம நஸீர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபையின் 71வது சபை அமர்வு இன்று (23.05.2017) காலை சபையின் தவிசாளர் கலபதி தலைமையில் இடம்பெற்ற போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஆரிப் சம்சுடீன், எம்.எஸ்.உதுமா லெப்பை ஆகியோரினால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியின் போது, பேருவளையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற சம்பவத்திற்குப் பின் சிறுபான்மை மக்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய மஹிந்தவை தோல்வியடைய வைத்து மைத்திரி அரசைக் கொண்டு வதந்தமைக்கு மிகப்பிரதான காரணம் இவ்வாறான இனாவாதச்செயலே. அது போல், இவ்வாட்சியிலும் இவ்வாறான செயல்களை இடம்பெறுவதை எம்மால் ஏற்க முடியாதென்பது இவ்வாட்சியிலும் இன நல்லிணக்கமில்லாமல் அநீதிகள் அதிகரித்து வருவதற்கு நல்லாட்சி அரசு கவனத்திற்கொள்ள வேண்டும். 

அது போல், பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் மிக மோசமான முறையில் பிரதமரைத் தாக்கிப் பேசுவதை எம்மால் ஏற்கவும் முடியாது. அதற்கும் நடவடிக்கையெடுக்கவில்லையென்பது கவலையாகவுள்ளது. அது போல் கிழக்கு மாகாண சபையிலும் இவ்வாறான இனப்பிரச்சினைகள் தொடர்பில் பிரேரணை கொண்டு வருவதிலும் சிக்கலுள்ளது. தற்போது முஸ்லிம்களுக்கெதிராக அதிக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. 

குறிப்பாக, பள்ளிகளைத் தாக்குவது, கடைகளைத் தாக்குவது போன்ற செயல்கள் இடம்பெற்று வருகின்றதையும், இவ்வாறன செயற்பாடுகள் மூலம் இனவாததை அதிகரிக்கத் தூண்டும் செயல்களை நல்லாட்சி அரசு கவனத்திற்கொள்ள வேண்டுவதுடன், அதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்நல்லாட்சி அரசின் மூலம் இனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களுக்கு சம உரிமையே. இந்நல்லாட்சியூடாக வேறுபாடுகள் எம்மில் இல்லை. அவ்வாறு இருக்கவும் கூடாது. அது போல் நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் இலங்கை என்றால் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிகம் கேட்கின்றார்கள். அவ்வாறு இலங்கை மோசமான நிலைக்கு மாறியுள்ளதா? என்ற கவலை எம்மில் எழுகிறது. நாம் மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபையிலும், பாராளுமன்றிலும் பேசக்கூடிய அதிகாரம் எம்மிடமுள்ளது. 

ஒற்றுமையாக தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழும் போது, வெளிநாட்டுச் சக்திகளின் மூலம் இலங்கையில் இனப்பிரச்சினையை மதகுருக்கள் என்ற வடிவில் ஆரம்பித்து வருகின்றனர். இதற்கு மிக பிரதான காரணம் வெளிநாட்டுச் சக்திகளும், பணங்களுமே. அத்துடன், சிங்கள மக்கள் கூட இவ்வாறான விடயங்களை விரும்பில்லை. இவ்வாறான பணங்கள் மூலம் இரவுகளில் குடி போதையில் தங்களது இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது. 

ஆகவே, இவ்வாறாக இலங்கை சிறுபான்மைச் சமூகத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக நடைபெறும் அநீதிகளை நல்லாட்சி அரசின் பங்காளிகளும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத்துறையினரும் சரியான முறையில் நடவடிக்கை எடுத்து, நல்லாட்சியில் இன ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்