மூதூர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) 95வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரின் முதல்வர் அல்ஹாஜ் A.H.M. பசிர் தலைமையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாடில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி மே மாதம் 3ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இக்கண்காட்சின் ஆரம்ப நாள் நிகழ்வின் பிரதம அதிதியான கிழக்கு மாகாண முதலைமைச்சர் கௌரவ. அல்ஹாஜ் பொறியியலாளர் ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்ஆரம்ப நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் அவர்களும் கலந்துகொண்டார்.
இரண்டாம் நாள் நிழக்வுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ எஸ். தண்டாயுதபாணி அவர்களும், மூன்றாம் நாள் நிழக்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ட்ரின் பெர்னாண்டோ அவர்களும் மற்றும் நான்காம் நாள் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ J.M. லாஹிர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஐந்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இக்கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பழைய மாணவர் சங்கம்
மூதூர் தேசிய பாடசாலை.
மூதூர்.







