
நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுகரித்துள்ள நிலையில், அனர்த்தத்தில் அகப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் முப்படையினரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த Mi 17 ரக ஹெலிகப்டர் ஒன்று சற்றுமுன்னர் காலி, பத்தேகம பகுதியில் நீரில் வீழ்ந்து விபத்துக்க்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.